மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை: ஒரு கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்ளுதல் (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 27 ஜனவரி 2025
Applies to England
என்எச்எஸ் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை முறையைப் பயன்படுத்திய பின்னர், மேற்கொண்டு சோதனைகள் தேவைப்பட்டால், கொலோனொஸ்கோபி எனப்படும் ஒரு பெருங்குடல் ஆய்வு செயல்முறை பற்றிய தகவலை இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்குகின்றது.
1. எதற்காக கொலோனொஸ்கோபி செயல்முறையை என்எச்எஸ் வழங்குகின்றது
சதைக் கட்டிகளும் மலக்குடல் புற்றுநோய்களும் நோய்க்குறிகள் எதுவுமின்றி ஏற்படலாம் என்பதால், அவற்றைக் கண்டுகொள்ள கொலோனொஸ்கோபி உதவலாம்.
சதைக் கட்டிகள் என்பன பெருங்குடலின் சுவர்களில் ஏற்படும் சிறிய அழற்சிகளாகும். பெரும்பாலான சதைக் கட்டிகள் தீங்கற்றவை, ஆனால் அவற்றில் சில ஒரு புற்றுநோயாக மாறுவதற்கான சாத்தியம் அதிகளவானது. மலக்குடல் புற்றுநோய் என்பது மலக்குடலின் எந்தப் பகுதியிலும் கண்டுகொள்ளப்படும் புற்றுநோயாகும். இதில் பெருங்குடல் மற்றும் பெருங்குடல் அடிவாய் அடங்கும்.
உங்கள் மலத்தின் மாதிரியில் ஓரளவு இரத்தம் இருப்பதை நாங்கள் கண்டால், ஒரு கொலோனொஸ்கோபியை நாங்கள் வழங்குகின்றோம். சதைக் கட்டிகளிலும் மலக்குடல் புற்றுநோய்களிலும் இரத்தக் கசிவு ஏற்படுகின்றது, ஆனால் இதை நீங்கள் எப்போதும் கண்டுகொள்ள முடியாது. பெரும்பாலான மக்களுக்கு மலக்குடல் புற்றுநோய் இருக்காது, ஆனால் இரத்தக் கசிவின் காரணத்தைச் சரிபார்த்துக்கொள்வதற்கு ஒரு கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்ளுதல் உதவுகின்றது.
உங்களுக்குச் சதைக் கட்டிகள் எதுவும் இருந்தால், கொலோனொஸ்கோபியின்போது நாங்கள் அவற்றை வழமையாக அகற்ற முடியும். இது உங்களுக்கு மலக்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைப் பெருமளவில் குறைக்க முடியும். புற்றுநோய் குறிகள் இருந்தால், எங்களால் உங்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும். ஆரம்பத்திலேயே மலக்குடல் புற்றுநோயைக் கண்டுகொள்ளுதல் அதற்கான சிகிச்சை பலனளிப்பதற்கான சாத்தியம் அதிகளவாக இருக்கும்.

பெருங்குடலும் மலக்குடலும் சேர்ந்து பெரும் மலக்குடலாக அமைகிறது.
மலக்குடல் உங்கள் சமிபாடு முறையின் ஒரு பகுதியாகும். அது உணவிலிருந்து சத்துக்களையும் நீரையும் எடுக்கின்றது, எஞ்சியதை மலமாக்குகின்றது.
2. கொலோனொஸ்கோபி
உங்கள் மலக்குடலின் உட்புறத்தில் சதைக் கட்டிகள் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் உள்ளனவா எனச் சரிபார்த்துக்கொள்வதற்கான ஒரு சோதனையே கொலோனொஸ்கோபி என்பது. மலக்குடல் புற்றுநோய் அல்லாத ஒரு மலக்குடல் வியாதி உங்களுக்கு உள்ளதா என உறுதிப்படுத்துவதற்கும் இது உதவுகின்றது.
ஒரு கொலோனொஸ்கோபியாளர் என அழைக்கப்படும் சிறப்பாகப் பயிற்றப்பட்ட ஒரு மருத்துவர் இந்தச் சோதனையைச் செய்வார்.
ஒரு சிறிய கமராவுடன் ஒரு மெல்லிய, வளையக்கூடிய குழாயை அவர்கள் உங்கள் அடிப்பகுதியுள் வைப்பார்கள். இந்தக் கருவி ஒரு கொலோனொஸ்கோப் என அழைக்கப்படுகின்றது. அது உள்ளே செல்வதை நீங்கள் உணர்வீர்கள், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அது வலியுள்ளதாக இருக்காது. அது ஒரு திரையில் உங்கள் மலக்குடல்களின் உட்புறத்தைக் காட்டும்.

கொலோனொஸ்கோபியாளர் ஒரு திரையில் மலக்குடலின் உட்புறத்திலுள்ள உருவங்களைப் பார்க்கிறார்.
ஒரு கொலோனொஸ்கோபி செயல்முறை வழமையாக 30லிருந்து 45 நிமிடங்களை எடுக்கின்றது. உங்கள் முழு நியமனமும் ஏறக்குறைய 2 மணித்தியாலங்களை எடுக்கக்கூடும்.
3. உங்கள் நியமனங்கள்
உங்களின் முதலாவது நியமனம் ஒரு கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்வது குறித்துக் கலந்துரையாடுவதற்கானது. இது ஒரு சிறப்பறிவுள்ள ஆய்வுச் சோதனை செயற்பாட்டாளர் (specialist screening practitioner- SSP ) நியமனம் என அழைக்கப்படுகின்றது. இந்தச் சிறப்பறிவாளர்:
-
ஆய்வுச் சோதனை முடிவுகள் குறித்து உங்களுடன் உரையாடுவார்
-
கொலோனொஸ்கோபி என்பது என்ன என விபரிப்பார்
-
சாத்தியமான ஆபத்துக்கள் மற்றும் நன்மைகள் பற்றி விளக்குவார்
-
நீங்கள் அதிகளவில் சௌகரியமாக இருக்கச் செய்வதற்காக இருக்கின்ற மாற்று வழிகள் பற்றிக் கலந்துரையாடுவார்
-
உங்களிடம் இருக்கக்கூடிய கேள்விகளுக்கு விடையளிப்பார்.
கொலோனொஸ்கோபி உங்களுக்குப் பொருத்தமானதா என அவர்கள் சரிபார்ப்பார்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய ஆரோக்கிய குறைபாடுகள் குறித்தும் நீங்கள் மருந்துகள் எடுக்கிறீர்களா என்பது குறித்தும் அவர்கள் கேட்பார்கள். சிலர் ஒரு கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்குப் பதிலாக, CT கொலோனொகிராபி ( CT colonography - CTC) என அழைக்கப்படும் கணினி எக்ஸ்-றேஸ் மூலமான ஒரு கொலோனொஸ்கோபி செயல்முறை உங்களுக்குப் பொருத்தமானதா என இந்த சிறப்பறிவாளர் மதிப்பிடுவார். உங்கள் மலக்குடலின் ஆரோக்கியத்தைச் சரிபார்த்துக்கொள்வதற்கு இது எக்ஸ்-றேஸ்களைப் பயன்படுத்துகின்றது. ஒரு CTC ஆய்வைப் பெற்றுக்கொள்வது குறித்து, GOV.UK என்பதில் அதிகளவில் வாசிக்கவும். https://www.gov.uk/government/publications/bowel-cancer-screening-having-a-ct-colonography-ctc-scan
ஒரு கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் தகுதியானவராக இருந்தால், இந்தச் செயல்முறையைப் பெறுவதற்கு நீங்கள் விரும்புகிறீர்களா எனத் தீர்மானிக்கலாம். அப்படி நீங்கள் விரும்பினால், அது வழமையாக மருத்துவமனையில் இடம்பெறும். இது உங்களின் முதலாவது நியமனத்திலிருந்து 2 வாராங்களுக்குள்ளாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு மேலதிகமான தேவைகள் எதுவும் உள்ளனவா என இந்தச் சிறப்புச் சிகிச்சையாளருக்குச் சொல்லவும். உதாரணமாக, ஒரு பராமரிப்பாளர் அல்லது ஒரு மொழிபெயர்ப்பாளர் போன்று, உங்கள் நியமனத்தின்போது உங்களுக்கு உதவ உங்களுக்கு ஒருவர் தேவைப்படக்கூடும்.
ஒரு ஆண் அல்லது பெண் கொலோனொஸ்கோபியாளரை நீங்கள் கேட்கலாம். உங்கள் விருப்பத்தை நிறேவேற்றுவதற்கு நாங்கள் முயற்சிப்போம், ஆனால் இது எப்போதும் சாத்தியமானதல்ல.

மலக்குடல் ஆய்வுச் சோதனை நியமன வழியைக் காட்டும் வரைபடம்
4. உங்கள் கொலோனொஸ்கோபிக்கு முன்னர்
ஆய்வுச் சோதனைக்கான சிறப்புச் செயற்பாட்டாளருடனான உங்கள் நியமனத்தின்போது, நீங்கள் சில அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்வீர்கள். இந்த அறிவுறுத்தல்கள் உங்கள் கெலோனொஸ்கோபிக்காக உங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்கு உங்களுக்கு உதவும்.
இந்தச் செலல்முறையைப் பெறுவதற்கு உங்கள் மலக்குடல்கள் வெறுமையாக இருக்க வேண்டும். தயவுசெய்து அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசிக்கவும். இவற்றில் அடங்குபவை:
-
உங்கள் கொலோனொஸ்கோபிக்கு முன்னுள்ள நாட்களில் நீங்கள் என்ன உண்ண வேண்டும் மற்றும் குடிக்க வேண்டும்
-
நீங்கள் எப்போது உண்பதையும் குடிப்பதையும் நிறுத்த வேண்டும்
-
குடிப்பதற்கு மலமிளக்கி பைகள் அல்லது அவற்றை எவ்வாறு பெறுவது என்பது பற்றிய தகவலை உங்களுக்குக் கொடுத்தல்
-
மலமிளக்கிகளை எவ்வாறு மற்றும் எப்போது எடுத்தல்.
உங்கள் மலக்குடல்களை வெறுமையாக்குவதற்கு உங்களுக்கு உதவ, வழமையைக் காட்டிலும் அதிகளவில் மலமிளக்கிகள் உங்களைக் கழிவறைக்குச் செல்லலச் செய்கின்றன. இது வழமையாக இந்தச் சிகிச்சை செயல்முறைக்கு முன்னுள்ள நாளாக இருக்கும் மற்றும் சிலவேளைகளில் செயல்முறை நாளாக இருக்கும்.
ஒரு கொலோனொஸ்கோபியின்போது நீங்கள் வழமையாக விழித்திருப்பீர்கள். பின்வருவனவற்றைப் பெறுவதற்கு நீங்கள் தீர்மானிக்கலாம்:
-
வலி தணிப்பு மருந்துகள்
-
வாயு மற்றும் காற்று
-
மயக்கமருந்தூட்டப்படுதல் – உங்கள் மேற்கையில் ஒரு சிறிய குழாய் (புனல்) மூலமாக கொடுக்கப்படும் மருந்து.
சில மருத்துவமனைகள் இந்த மாற்றுமுறைகள் அனைத்தையும் வழங்குவதில்லை.
5. உங்கள் கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்ளுதல்
உங்கள் கொலோனொஸ்கோபி என்டோஸ்கோபி யூனிட் எனப்பட்ட இடத்தில் இடம்பெறும்.
அந்த நாளில், ஒரு தாதி அல்லது சிறப்பறிவுள்ளவரான மருத்துவர் என்ன நடைபெறப்போகின்றது எனவும் சாத்தியமான ஆபத்துக்கள் பற்றியும் விளக்குவார். ஒரு சம்மதப் படிவத்துக்குக் கையொப்பம் இடுமாறு நீங்கள் கேட்கப்படுவீர்கள். இது ஆபத்துக்களை நீங்கள் புரி்துகொண்டீர்கள் எனவும் செயல்முறையைப் பெறுவதற்கு உடன்படுகிறீர்கள் எனவும் உறுதிப்படுத்துவதற்காகவாகும்.
நீங்கள் உடன்பட்டால், ஒரு மருத்துவமனை மேலங்கியை அணியுமாறு அவர்கள் உங்களைக் கேட்பார்கள். உங்கள் செயல்முறைக்காக நீங்கள் போர்த்திக்கொள்ளப்படுவீர்கள். இந்த மேலங்கியின் பின்புறத்தில் ஒரு பிளவு உள்ளது.
நீங்கள் ஏற்பதற்கான வலி தணிப்பு மாற்று முறைகளை உங்களுக்கு அவர்கள் கொடுப்பார்கள்.
சோதனையைப் பெறுவதற்கு நீங்கள் உங்கள் முழங்கால்கள் சிறிதளவில் மடிக்கப்பட்டவாறு உங்கள் இடது பக்கம் படுப்படி படுத்திருக்கிறீர்கள்.
குழாய் உங்கள் அடிப் பகுதிக்குள் சென்று உங்கள் பெருங்குடலின் மேற்பகுதிக்குச் செலுத்தப்படுகின்றது. குழாய் இலகுவாக மடிகின்றது. அதனால் உங்கள் மலக்குடலின் வளைவுகளைச் சுற்றி குழாயால் செல்ல முடியும்.
கொலோாஸ்கோபியாளர் மெதுவாக தண்ணீரை அல்லது வாயுவை (கார்பொண் டயோக்சைட்) உள்ளே செலுத்துவார். இது உங்கள் மலக்குடல்களை விரிவாக்கி அவற்றைப் பார்ப்பதற்கு உதவுகின்றது. நீங்கள் கழிவறைக்குச் செல்ல வேண்டும் போன்று உணர்வீர்கள். ஆனால், உங்கள் மலக்குடல்கள் ஏற்கனவே வெறுமையாக இருப்பதால், இது குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. வீங்கப்பட்டுள்ளது போன்று ஓரளவுக்கு உணருவது சாதாரணமானதாகும்.
உங்களுக்கு ஓரளவுக்கு வயிற்றுப் பிடிப்புகள் இருக்கக்கூடும். ஒரு கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்ளுதல் அசௌகரியமானதாக இருக்கும், ஆனால் அது வலி உள்ளதாக இருக்காது. உங்களுக்கு ஏதாவது வலி இருந்தால், அவர்களுக்குத் தெரிவிக்கவும். நீங்கள் பெரிதும் சௌகரியமாக இருப்பதற்காக, அவர்கள் சரிப்படுத்தல்களைச் செய்ய முடியும்.
அவர்கள் உங்கள் மலக்குடல்களிலுள்ள சதைக் கட்டிகளை அகற்றக்கூடும் அல்லது ஒரு மைக்றொஸ்கோப் மூலமான ஒரு நெருங்கிய பார்வைக்காாக, உடம்பு திசுவின் ஒரு சிறிய மாதிரியை எடுக்கக்கூடும். இது திசு ஆய்வு (பயோப்சி) என அழைக்கப்படுகின்றது. இது நடைபெறுகின்றது என நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், ஏனெனில் உங்கள் மலக்குடல்களுள் நரம்புகள் இல்லை.
6. உங்கள் கொலோனொஸ்கோபிக்குப் பின்னர்
நீங்கள் அமைதியடைவதற்காக ஒரு சுகம் பெறும் பகுதிக்குச் செல்வீர்கள். வீட்டுக்குச் செல்வதற்கு நீங்கள் தயாராக இருக்கும்வரை, தாதிகள் உங்களை அவதானிப்பார்கள். கொலோனொஸ்கோபியைச் செய்தவர் சதைக் கட்டிகள் எதையும் அகற்றியுள்ளாரா அல்லது ஒரு திசு மாதிரியை எடுத்தாரா என உங்களுக்குச் சொல்லப்படும்.
பின்வருவன உங்களுக்குத் தேவைப்படக்கூடும்:
-
குறிப்பாக நீங்கள் மயக்க மருந்து பெற்றிருந்தால், நீங்கள் தூக்கமாக இருக்கலாம் என்பதால், உங்களை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு ஒருவர்
-
ஓய்வு பெறுதல். அப்படியானால், வேலைக்கு அல்லது வேறு கடமைகளுக்குச் செல்லாதிருப்பதை நீங்கள் விரும்பக்கூடும்.
ஒரு கொலோனொஸ்கோபியின் பின்னர் வயிறு வீக்கம் அல்லது வயிற்று பிடிப்புகள் உங்களுக்கு இருக்கக்கூடும். இது வழமையாக 2- 3 மணித்தியாலங்களுக்கு மா்த்திரம் நீடிக்கின்றது.
நீங்கள் மயக்கமருந்தூட்டல் பெற்றிருந்தால், நீங்கள்:
-
குறைந்த பட்சம் 12 மணித்தியாலங்களுக்கு உங்களுடன் இருப்பதற்கு ஒரு பொறுப்புள்ள வயதுவந்த ஒருவரை வைத்திருக்க வேண்டும்
-
24 மணித்தியாலங்களுக்கு வாகனம் ஓட்டக்கூடாது, மது அருந்தக்கூடாது அல்லது இயந்திர சாதனங்களை இயக்கக்கூடாது.
இரண்டு நாட்களுக்கு உங்கள் மலத்தில் ஓரளவு இரத்தம் இருக்கக்கூடும் அல்லது உங்கள் அடிப்பகுதியிலிருந்து இரத்தக் கசிவு இருக்கக்கூடும். இந்த விடயங்கள் பொதுவானவை. 2 நாட்களின் பின்னர் இந்த நோய்க் குறிகள் போகவில்லை என்றால், நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
பின்வருவன உங்களுக்கு இருந்தால், நீங்கள் 111 எண்ணை அழைக்கவும் அல்லது கொலோனொஸ்கோபி பெற்றிருந்த மருத்துவமனையை அழைக்கவும்:
-
உங்கள் அடிப்பகுதியிலிரு்ந்து அதிகளவிலான இரத்தக் கசிவு
-
போய்விடாத இரத்தக் கசிவு அல்லது அது மோசமடைந்தால்
-
கடூரமான வயிற்று வலி அல்லது மோசமடையும் வலி
-
ஒரு உயர்வான வெப்பநிலை அல்லது உங்களுக்குச் சூடாக அல்லது நடுக்கமாக இருந்தால்.
7. கொலோனொஸ்கோபி செல்முறையின் சாத்தியமான ஆபத்துக்கள்
மிகவும் அருமையான விடயங்களில், ஒரு புற்றுநோயை அல்லது பின்னர் புற்றுநோயாக மாறக்கூடிய ஒரு சதைக் கட்டியை கொலோனொஸ்கோபி தவறவிடலாம். பின்வருவன இருந்தால், இது நிகழ்வதற்கான அதிகளவு சாத்தியம் உள்ளது:
-
உங்கள் மலக்குடல்கள் முற்றிலும் வெறுமையாக இருக்கவில்லை
-
உங்கள் மலக்குடல்களில் கமராவை நகர்த்துவது கடினமாக உள்ளது.
மலக்குடல் புற்றுநோய் குறிகள் உங்களுக்கு இருந்தால், ஒரு குடும்ப மருத்துவரைக் காணவும். நீங்கள் அண்மையில் மலக்குடல் ஆய்வுச் சோதனையைப் பெற்றிருந்தாலும்கூட, இது முக்கியமானது. NHS.UK என்பதில் மலக்குடல் புற்றுநோய் குறிகள் பற்றி அதிகளவில் வாசிக்கவும்.
அரிதான விடயங்களில், கொலோனொஸ்கோபியின்போது சிக்கல்கள் இடம்பெறலாம், உங்களுக்கு:
-
மயக்கமருந்தூட்டல் ஒவ்வாமல் இருந்தால்
-
கொலோனொஸ்கோபிக்குப் பின்னர் பெருமளவில் இரத்தக் கசிவு இருந்தால்
-
மலக்குடலில் ஒரு ஓட்டை (சிறிய சிதைவு அல்லது ஊசிதுளை) ஏற்பட்டால்.
கொலோனொஸ்கோபியைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு 2,500 நபர்களில் ஏறக்குறைய 1வருக்கு ஒரு ஊசி மூலமான இரத்தம் ஏற்றுதல் தேவைப்படுகின்றது.
ஒவ்வொரு 1,700 கொலோனொஸ்கோபி செயல்முறைகளில், ஏறக்குறைய 1இல் மலக்குடல் ஓட்டைகள் ஏற்படுகின்றன. இது நிகழ்ந்தால், அதைத் திருத்திக்கொள்வதற்கு உங்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படக்கூடும். இது ஓட்டையின் அளவையும் நிலையையும் பொறுத்ததாக இருக்கும். சிலருக்கு அறுவைச் சிகிச்சை எதுவும் தேவைப்படுவதில்லை.
மிகவும் அரிதான விடயங்களில், ஒரு கொலோனொஸ்கோபிக்குப் பின்னரான சிக்கல்கள் மரணத்தை ஏற்படுத்தக்கூடும். கொலோனொஸ்கோபியைச் செய்பவர்கள் உயர்ந்தளவில் பயிற்றப்பட்டவர்கள், மற்றும் இது மிகவும் அசாத்தியமானது.
இந்தப் புள்ளிவிபரங்கள் பொதுமக்களுக்கான ஒரு வழிகாட்டல் மாத்திரமே. சிறப்பறிவு பெற்ற ஆய்வுச் சோதனை மருத்துவர் உங்கள் தனிப்பட்ட ஆபத்து குறித்து உங்களுக்கு அறிவுரை அளிப்பார். இது உங்கள் வயதையும் ஆரோக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்டது.
8. கொலோனோஸ்கோபி முடிவுகள்
அதே நாளில் நீங்கள் உங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடும், அல்லது அது சில வாரங்களை எடுக்கலாம். உங்கள் முடிவுகளின் ஒரு பிரதியை உங்கள் குடும்ப மருத்துவருக்கும் அனுப்புகின்றோம்.
4 முக்கிய முடிவுகள் உள்ளன:
-
சாதாரணமான முடிவுகள்
-
சதைக் கட்டிகள் காணப்பட்டன- மேற்கொண்டு அவதானித்தல் தேவைப்படவில்லை
-
சதைக் கட்டிகள் காணப்பட்டன- மேற்கொண்டு அவதானித்தல் தேவைப்படுகின்றது
-
மலக்குடல் புற்றுநோய்.
சிலவேளைகளில் வேறு மலக்குடல் வியாதிகளைக் கண்டுகொள்கிறோம். அதே கொலோனொஸ்கோபியில் சதைக் கட்டிகளை அல்லது மலக்குடல் புற்றுநோயை, மற்றும் வேறு மலக்குடல் வியாதிகளைக் கண்டுகொள்வதற்கான சாத்தியம் உள்ளது.
8.1 சாதாரண முடிவுகள்
100 மக்களில் ஏறக்குறைய 11 நபர்கள் இந்த முடிவைப் பெறுகிறார்கள்.
அதன் கருத்து, நாங்கள்:
-
சதைக் கட்டிகள் எதையும் கண்டுகொள்ளவில்லை, மேலும்
-
வேறு மலக்குடல் வியாதிகள் இருப்பதற்கான குறிகள் எதுவும் இருக்கவில்லை.
நீங்கள் இன்னும் 75 வயதுக்குக் கீழுள்ளவராக இருந்தால், 2 வருடங்களில் நாங்கள் திரும்பவும் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையை உங்களுக்கு வழங்குவோம்.
8.2 சதைக் கட்டிகள் கண்டுகொள்ளப்பட்டன- மேற்கொண்டு அவதானித்தல் தேவைப்படவில்லை
100 மக்களில் ஏறக்குறைய 50 நபர்கள் (அரைவாசி) இந்த முடிவைப் பெறுகிறார்கள்.
இதன் கருத்து, நாங்கள்:
-
உங்கள் கொலோனொஸ்கோபியின்போது, சதைக் கட்டிகளை அகற்றினோம், அல்லது
-
சோதனைக்காக உங்கள் மலக்குடல்களிலிருந்து ஒரு அணுக்கள் (திசு சோதனை) மாதிரியை எடுத்தோம்.
உங்கள் மாதிரியைச் சோதித்த பின்னர், உங்களுக்கு மேற்கொண்டு சிகிச்சை அல்லது சரிபார்த்தலுக்கான கொலோனொஸ்கோபி செயல்முறைகள் தேவைப்படவில்லை.
நீங்கள் இன்னும் 75 வயதுக்குக் கீழுள்ளவராக இருந்தால், 2 வருடங்களில் நாங்கள் திரும்பவும் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையை உங்களுக்கு வழங்குவோம்.
8.3 சதைக் கட்டிகள் கண்டுகொள்ளப்பட்டன- மேற்கொண்டு அவதானித்தல் தேவைப்படுகின்றது
100 மக்களில் ஏறக்குறைய 11 நபர்கள் இந்த முடிவைப் பெறுகிறார்கள்.
இதன் கருத்து, உயர்ந்த-ஆபத்து வகையான ஒரு சதைக் கட்டியை நாங்கள் கண்டுள்ளோம். இவை மலக்குடல் புற்றுநோயாக மாறுவதற்கான அதிகளவு சாத்தியம் உள்ளது.
சிலவேளைகளில் கொலோனொஸ்கோபியின்போது சதைக் கட்டிகளை அகற்றுதல் மிகவும் கடினமாக உள்ளது. அப்படியானால், சிறப்பறிவுள்ளவர் மூலமாக இன்னொரு கொலோனொஸ்கோபி அல்லது அறுவைச் சிகிச்சை உங்களுக்குத் தேவைப்படக்கூடும்.
அதன் பின்னர் நாங்கள் உங்களுக்கு வருங்காலத்தில் அதிகளவில் ஒழுங்கான கொலோனொஸ்கோபி செயல்முறைகளை வழங்குவோம். இதன் நோக்கம், உங்கள் மலக்குடல் ஆரோக்கியத்தையும் புதிய சதைக் கட்டிகள் எதுவும் உங்களுக்கு உள்ளனவா எனவும் பார்த்துக்கொள்வதாகும்.
8.4 மலக்குடல் புற்றுநோய்
100 மக்களில் 7க்கும் 10க்கும் இடைப்பட்டோர் இந்த முடிவைப் பெறுகிறார்கள்.
மலக்குடல் புற்றுநோய் இருப்பதை நாங்கள் கண்டால், சிகிச்சை மாற்று வழிகள் குறித்தும் ஆதரவு குறித்தும் கலந்துரையாடுவதற்காக நீங்கள் ஒரு புற்றுநோய் நிபுணரைப் பார்ப்பீர்கள்.
மிகவும் ஆரம்ப கட்டத்திலுள்ள மலக்குடல் புற்றுநோயைக் கொண்டுள்ள பெரும்பாலான மக்கள் (ஏறக்குறைய 10இல் 9) வெற்றிபெறும் சிகிச்சையைப் பெறுகிறார்கள்.
முற்றிய மலக்குடல் புற்றுநோய் உங்களுக்கு இருந்தால், அதற்கான சிகிச்சை கடினமானதாக இருக்கலாம். அதற்கான குணப்படுத்தல் சாத்தியமற்றது.
8.5 வேறு மலக்குடல் வியாதிகள்
சிலவேளைகளில் சதைக் கட்டிகள் அல்லது மலக்குடல் புற்றுநோய் எதையும் கொலோனொஸ்கோபி கண்டுகொள்வதில்லை. ஆனால், வேறு மலக்குடல் வியாதிகளை நாங்கள் கண்டுகொள்கிறோம். உதாரணமாக:
-
மூல வியாதி
-
மலக்குடலில் வீக்கங்கள்
-
பெருங்குடலில் சிறிய அழற்சி அல்லது பெருங்குடல் அழற்சிகள்
-
புண்ணை உண்டுபண்ணும் பெருங்குடல் அழற்சிகள்
- மக்களில் ஏறக்குறைய 18 நபர்கள் இந்த முடிவைப் பெறுகிறார்கள்.
NHS.UK என்பதில் இந்த நோய் நிலைமைகள் குறித்து நீங்கள் அதிகளவில் கண்டுகொள்ள முடியும். வேறு மலக்குடல் வியாதிகளின் குறிகளை நாங்கள் கண்டால், அதனுடைய கருத்து என்ன என்பதையும் அடுத்த நடவடிக்கைகள் எவை என்பதையும் உங்கள் குடும்ப மருத்துவர் விளக்குவார். உங்களுக்குச் சிகிச்சை தேவைப்படலாம் அல்லது மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டத்துக்கு அப்பால் அவதானித்தல் உங்களுக்குத் தேவைப்படலாம்.
ஒரு கொலோனொஸ்கோபியைப் பெறும் ஒவ்வொரு 100 மக்கள் தொடர்பான முடிவுகளைக் காட்டுகின்ற வரைபடம்
9. அதிகளவிலான தகவல் மற்றும் ஆதரவு
ஒரு கொலோனொஸ்கோபியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றிய அறிவுரைக்கு, 0800 707 60 60 இல் எங்களின் இலவச உதவி தொலைபேசி சேவையை நீங்கள் அழைக்கலாம். உங்களுக்குக் கேட்டல் மற்றும் பேச்சு கஷ்டங்கள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்வதற்கு நீங்கள் றிலே யூகே (Relay UK) சேவையைப் பயன்படுத்தலாம். 18001 என்பதை டயல் செய்து, பின்னர் உங்கள் ரெக்ஸ்ட்போண் மூலமாக அல்லது Relay UK app மூலமாக 0800 707 60 60 இல் அழைக்கலாம்.
இந்தத் தகவல் வேறு வடிவங்களிலும் கிடைக்கின்றது. இவற்றில் அடங்குபவை: ஈசி றீட் மற்றும் ஏனைய மொழிகள். வேறொரு வடிவத்தைக் கேட்டுக்கொள்வதற்கு, நீங்கள் 0300 311 22 33 இல் அழைக்கலாம் அல்லது england.contactus@nhs.net இல் மின் அஞ்சல் அனுப்பலாம்.
மேலும், நீங்கள்:
-
உங்கள் குடும்ப மருத்துவருடன் உரையாடலாம்
-
NHS.UK இல் மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனை குறித்து அதிகளவில் கண்டுகொள்ளலாம்.
-
என்எச்எஸ் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய திருநங்கைகளுக்கன மற்றும் ஆண்-பெண் பிரிவற்றோருக்கான தகவலை வாசிக்கலாம்.
நீங்கள் 75க்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருந்தால், இன்னும் நீங்கள் 2 வருடங்களுக்கு ஒருமுறை மலக்குடல் புற்றுநோய் ஆய்வுச் சோதனையில் பங்குகொள்ளலாம், ஆனால் நீங்கள் அழைக்கப்படமாட்டீர்கள். வீட்டில் செய்வதற்கான சோதனைக் கருவியைக் கேட்டுக்கொள்வதற்கு, 0800 707 60 60 இல் உதவித் தொலைபேசியை நீங்கள் அழைக்கலாம்.
ஆய்வுச் சோதனைக்காகச் சரியான நேரத்தில் உங்களை அழைப்பதற்காக நாங்கள் உங்களின் என்எச்எஸ் பதிவேடுகளிலிருந்து தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துகின்றோம். இந்தத் தகவல் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்தவதற்கும் தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் எங்களுக்கு உதவுகின்றது. உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் மற்றும் பாதுகாக்கின்றோம் என்பது பற்றி அதிகளில் வாசிக்கவும்.
ஆய்வுச் சோதனையிலிருந்தும் எவ்வாறு விலகுவது எனக் கண்டுகொள்ளவும்.