வழிகாட்டுதல்

கருப்பை வாய் ஆய்வுச் சோதனை அழைப்புகள் (Tamil)

வெளியிடப்பட்டது 19 June 2024

Applies to England

என்எச்எஸ் கருப்பை வாய் ஆய்வுச் சோதனைக்கு (முன்னர் ‘சிமியர் ரெஸ்ட்’ என அழைக்கப்பட்டது) உங்களை அழைப்பதற்காக எழுதுகின்றோம். 25க்கும் 64க்கும் இடையிலான வயதுள்ள எல்லாப் பெண்களுக்கும் மற்றும் ஒரு கருப்பை வாய் உள்ள மக்களுக்கும் நாங்கள் இந்த ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம். இந்த ஆய்வுச் சோதனை கருப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பதற்கும் உயிரைக் காப்பதற்கும் உதவுகின்றது.  

1. உங்கள் கருப்பை வாய் ஆய்வுச் சோதனைக்கு எவ்வாறு பதிவுசெய்வது  

நீங்கள் முன்னர் அழைக்கப்பட்டிருந்தால் அல்லது உங்கள் கடைசி கருப்பை வாய் ஆய்வுச் சோதனையை நீங்கள் தவறவிட்டிருந்தால், நீங்கள் இன்னும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

  • ஒரு நியமனத்தைச் செய்வதற்கு, உங்கள் குடும்ப மருத்துவர் சிகிச்சை இடத்தை நீங்கள் தொடர்புகொள்ளலாம். ஒரு குடும்ப மருத்துவர் சிகிச்சை இடத்துடன் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமானால், find a GP service tool என்பதை நீங்கள் பயன்படுத்தலாம்.  
  • மாறாக, find your nearest sexual health clinic என்பதை நீங்கள் பயன்படுத்தலாம். எல்லாச் சிகிச்சை இடங்களிலும் இந்த ஆய்வுச் சோதனை நடைபெறுவதில்லை என்பதால், கருப்பை வாய் ஆய்வுச் சோதனையை வழங்கும் சிகிச்சை இடத்தைத் தயவுசெய்து சரிபார்த்துக்கொள்ளவும்.  

கருப்பை வாய் ஆய்வுச் சோதனையில் நீங்கள் அண்மையில் பங்குபற்றியிருந்தால், இன்னொரு நியமனத்தை நீங்கள் பதிவுசெய்யத் தேவையில்லை.  

2. கருப்பை வாய் ஆய்வுச் சோதனை பற்றியது   

பெரும்பாலும் எல்லா கருப்பை வாய் புற்றுநோய்களும் உயர்ந்த -ஆபத்து வகைகளைக் கொண்டதான மனித பபிலொமவைறஸ் (Human papillomavirus- HPV) என்பதன் மூலமான நோய்த் தொற்றினால் ஏற்படுத்தப்படுகின்றன. உயர்ந்த ஆபத்து உள்ளதான HPV இருக்கின்றதா என்பதைக் கருப்பை வாய் ஆய்வுச் சோதனை கவனிக்கின்றது. உங்கள் ஆய்வுச் சோதனை மாதிரியில் HPV இருப்பதை நாங்கள் கண்டுகொண்டால், ஏதாவது அசாதாரண அணு மாற்றங்கள் உள்ளனவா என நாங்கள் சரிபார்த்துக்கொள்வோம். ஏதாவது மாற்றங்களை முன்னராகவே கண்டறிந்து, அவற்றுக்குச் சிகிச்சை அளித்தல் மூலமாகப் பெரும்பாலான கருப்பை வாய் புற்றுநோய் நிகழ்வுகளைத் தடுக்க முடியும்.   

உங்கள் பாலியல் நாட்டம், பாலியல் வரலாறு எதுவாக இருந்தாலும், அல்லது நீங்கள் HPV தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும், கருப்பை வாய் ஆய்வுச் சோதனையைப் பெறுவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.   

இந்தச் சோதனை சில நிமிடங்களை மாத்திரமே எடுக்கின்றது. மேலும், நீங்கள் ஒரு பெண் தாதியை அல்லது பெண் மருத்துவரை வேண்டிக்கொள்ளலாம். உங்கள் சோதனை முடிவுகளை நீங்கள் எப்போது எதிர்பார்க்கலாம் என அவர்கள் உங்களுக்குச் சொல்வார்கள். ஆகையால், உங்கள் மருத்துவரின் சிகிச்சை இடத்தில் அல்லது பாலியல் ஆரோக்கிய சிகிச்சையகத்தில் உங்கள் தொடர்பு விபரங்கள் சரியாக உள்ளன எனத் தயவுசெய்து பார்த்துக்கொள்ளவும்.  

3. அதிகளவிலான தகவல்   

NHS cervical screening programme தொடர்பாக என்எச்எஸ் இணையதளத்தில் அதிகளவில் கண்டுகொள்ளவும். ‘Helping you decide’ எனப்பட்ட துண்டுப்பிரசுரத்தைத் தயவுசெய்து வாசிக்கவும். இது easy read என்பதிலும் உள்ளது.   

கருப்பை வாய் ஆய்வுச் சோதனையை எடுத்துக்கொள்வது தொடர்பாக நீங்கள் கவலையுள்ளவராக, உங்களுக்கு ஆதரவு தேவைப்பட்டால், தயவுசெய்து ‘Support for people who find it hard to attend’ வழிகாட்டலை வாசிக்கவும்.   

ஒரு மாற்று வடிவத்தில் இந்தத் தகவலை வேண்டிக்கொள்வதற்கு, 0300 311 22 33 இல் அழைக்கவும் அல்லது england.contactus@nhs.net என்பதில் மின் அஞ்சல் அனுப்பவும்.  

4. கருப்பை வாய் புற்றுநோய் குறிகள்   

உங்களுக்கு ஏதாவது அசாதாரண நோய்க் குறிகள் இருந்தால், தயவுசெய்து முடிந்தளவில் விரைவாக உங்கள் குடும்ப மருத்துவருக்கு அல்லது பால்ரீதியான ஆரோக்கிய சிகிச்சை இடத்திடம் சொல்லவும்.  

இந்த நோய்க் குறிகளில் அடங்குபவை:  

  • உங்களுக்கு அசாதாரணமான முறையில் பெண் குறியில் இரத்தக் கசிவு – உடலுறவின்போது அல்லது அதன் பின்னர், மாதவிடாய் காலங்களுக்கிடையில், மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் அல்லது மாதவிடாய் காலங்களின்போது அசாதாரணமாக பெருமளவிலான இரத்தக் கசிவு  
  • உடலுறவின்போது வலி   
  • பெண்குறி வடிதலில் மாற்றங்கள்  
  • உங்கள் முதுகின் கீழ்ப்புறத்தில், இடுப்பு எலும்புகளுக்கிடையில் (இடுப்பு எலும்புச் சட்டம்) அல்லது வயிற்றின் கீழ்ப்புறத்தில் வலி.   

கருப்பை வாய் ஆய்வுச் சோதனை குறித்து உங்களிடம் ஏதாவது கேள்விகள் இருந்தால், தயவுசெய்து உங்கள் குடும்ப மருத்துவருடன் அல்லது சிகிச்சை இடத்தில் அல்லது சிகிச்சை இடத்திலுள்ள தாதியுடன் பேசவும்.    

உங்கள் உண்மையுள்ள,   

என்எச்எஸ் கருப்பை வாய் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித்திட்டம்