குழும அறிக்கை

இலங்கை - மனித உரிமை முக்கியத்துவமான நாடு

This is a Human Rights Priority Country report taken from the Foreign and Commonwealth Office 2016 Human Rights and Democracy Report.

2016 to 2019 May Conservative government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது

ஆவணங்கள்

விபரங்கள்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது 2016 இல் சில முன்னேற்றங்களைக் கண்டது. ஐநா மனித உரிமைகள் சபையில் (HRC) தீர்மானம் 30/1 இல் பிரதிபலித்த அதன் அர்ப்பணிப்புக்கள் சிலவற்றில் அரசாங்கம் சில முன்னேற்றங்களைச் செய்தது. ஆனால் அதிகம் செய்ய வேண்டியதாக உள்ளது. காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஒன்றை நிறுவூம் சட்டவாக்கம் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய இராச்சியம் வரவேற்றது. மீளிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கிய படிநிலையாக இது இருந்தது. எவ்வாறாயினும் அது நடவடிக்கைக்கு இன்னும் வரவேண்டியதாக உள்ளது. ஒரு அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இது அதிகாரப் பரவலாக்கல் மற்றும் உரிமைகள் சட்ட மூலம் ஒன்றின் அறிமுகம் என்பவற்றை கவனிக்கும் என நம்பப்படுகிறது. மிகவூம் விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை (PTA) இல்லாதொழிப்பதற்கும் இலங்கை அரசாங்கம் அர்ப்பணித்திருப்பதுடன்இ சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுடன் உடன்படும் என எண்ணப்படும் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவாக்கத்தை வரைந்து ண்டிருக்கிறது. வரலாற்று ரீதியான குறைகளை அகற்றுவதிலும் மனித உரிமைகள் மற்றும் சட்டம் ஒழுங்கை இலங்கையில் அமுல்படுத்தவதிலும் இவைகள் முக்கியமான படிநிலைகளாக இருக்கும்.

2016 இல் மேலும் காணி விடுவிப்புக்களை அரசாங்கம் அறிவித்தது. வடக்கில் இராணுவம் ஒரு கணிசமான பிரசன்னத்தைப் பேணும் அதேவேளையில் அது எடுத்திருக்கும் குறைவான தோற்றத்தன்மை பொதுவாக வரவேற்கப்படுகிறது. காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறும்இ வடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வந்துள்ளது. தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழுள்ள சில கைதிகள் குற்றச் சாட்டுகள் இல்லாமல் இன்னும் தடுத்து க்கப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புஇ அச்சுறுத்தல்இ தொந்தரவூகள் வடக்கு கிழக்கில் தொடருவதாக அறிக்கைகள் உள்ளன. எவ்வாறாயினும் முன்னைய அரசாங்கத்தில் உள்ளதைக் காட்டிலும் மிகவூம் குறைந்தமட்டத்தில் உள்ளது. இனங்களுக்கிடையிலான ஒரு பதற்றம் அக்கறைக்குரிய விடயமாக தொடர்ந்தும் உள்ளது. தீவிரவாத தேசியக் குழுக்களின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுஇ பதற்றங்களைத் தூண்டிவிட்டது. ஐநாவூடனும் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைத்த பல ஐநா நிபுணர்களுடனும் சித்திரவதை மீதான ஐநாவின் விசேட அறிக்கையாளர் உட்பட்டோருடனும் ஊடாடி வருவதை இலங்கை தொடர்ந்தது. அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பை அவர் அறிக்கையிட்டிருந்தார். ஆனாலும் தடுப்பு நிலையங்களின் நியமம் பற்றியூம் சித்திரவதை சம்பவங்களின் தொடருகை பற்றியூம் அவர் அக்கறை எழுப்பியூள்ளார்.

பால்நிலை பற்றிய சமூக எதிர்பார்ப்புகளுக்கு உடன்பட்டிராத பால்நிலைமாறும் ஆட்கள் மற்றும் ஏனையோரால் எதிர்கொள்ளப்படும் பாரபட்சம் துஷ்பிரயகம் மற்றும் பிழையான நடத்துகையைஇ எடுத்துக்காட்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையூடன் LGB மற்றும் T ஆட்களுக்கு எதிரான பாரபட்சம் ஆனது ஒரு பிரச்சினையாக தொடர்ந்தும் உள்ளது.

மனித உரிமைகளின் மீறுகைஇ சித்திரவதை உட்பட்டவற்றின் இடர்களைக் குறைப்பதை இலக்காகக் கொண்டுஇ சட்டம் ஒழுங்கில் பொதுமக்களின் நம்பிக்கையை முன்னேற்றுவதையூம் இலக்காகக் கொண்டுஇ ஒரு மிகவூம் இயலுமையூடைய தொழில்வாண்மை மிக்கதும் பொறுப்புக்கூறக்;கூடியதுமான பொலிஸ்படையை விருத்தி செய்யூம் இலங்கை அரசுகளின் முயற்சிகளுக்கு ஐக்கிய இராச்சியம் ஆதரவளிப்பதை தொடர்ந்து ஆற்றியது. மீளிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்இ வடக்கில் கண்ணிவெடி அகற்றல் மீதான ஐநாவின் வேலைகளுக்கு ஐக்கிய இராச்சியமும் ஆதரவூ வழங்கியது. அப்போதைய மனித உரிமைகள் மற்றும் பொதுநலவாய FCO அமைச்சர் பறௌனெஸ் ஆன்லே நவம்பரில் விஜயம் மேற்கொண்டதுடன்இ மீளிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஆதரவளிப்பதற்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்பை அழுத்தியூரைத்திருந்தார். இலங்கையில் பால்நிலை மற்றும் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளை கையாளுவதற்கு உதவூவதல் மற்றும் பாதிக்கப்பட்டோரின் துன்புறும் வடுவினை கையாளுவதிலும் பொறுப்புக்கூறுவதிலும் உள்ள முக்கியத்துவம் என்பவற்றிலும் உதவூவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் வேலையை அமைச்சரும் அழுத்தியூரைத்திருந்தார். முரண்பாட்டில் பாலியல் வன்முறையை முடிவூக்கு கொண்டு வருவதற்கு இந்த வருடத்தின் ஆரம்பத்திலானஇ இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பான பிரகடனத்தின் உறுதிப்படுத்தலை அவர் வரவேற்றார்.

மனித உரிமைகள் தொடர்பாக மேலும் விரைவான முன்னேற்றத்தைச் செய்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்து தூண்டுதல் செய்வதை ஐக்கிய இராச்சியம் 2017 இலும் தொடரும். பொறுப்புக்கூறல்இ மீளிணக்கம்இ மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் செய்த அர்ப்பணிப்புக்களை செய்து முடிப்பதற்கு ஆதரவளிப்பதில் இலங்கை அரசாங்கத்துடனும்இ சர்வதேச பங்காண்மையாளர்களுடனும்இ சிவில் சமூகத்திற்கும் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம். அத்துடன் 2017 மார்ச்சில் மனித உரிமைகள் சபைக்கு முன்பதாக இலங்கையின் முன்னேற்றம் தொடர்பாக ஐநாவின் உயர் ஸ்தானிகரின் அறிக்கையையூம் நாம் எதிர்பார்த்து இருக்கிறௌம்.

Read the full Annual Human Rights report 2016 here

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 21 July 2017

Sign up for emails or print this page