விளம்பரப் பொருள்

சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனைக்கான உங்கள் வழிகாட்டி (Tamil)

புதுப்பிக்கப்பட்டது 9 ஜனவரி 2025

Applies to England

சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனையில் பங்குகொள்கிறீர்களா என நீங்கள் தீர்மானிக்கலாம். நீங்கள் தீர்மானிப்பதற்கு இந்தத் துண்டுப்பிரசுரம் உங்களுக்கு உதவுகின்றது.

1. என்எச்எஸ் எதற்காக சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனையை வழங்குகின்றது

சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை என்பது உங்கள் சர்க்கரை வியாதி பராமரிப்பின் ஒரு முக்கியமான பகுதியாகும். பார்வை இழப்பைத் தடுக்க உங்களுக்கு உதவுவதற்காக நாங்கள் ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம்.

சர்க்கரை வியாதி உள்ள ஒருவர் என்ற முறையில், சர்க்கரை வியாதி விழித்திரை நோய் என அழைக்கப்படும் ஒரு நிலைமை மூலமாக சேதம் ஏற்படும் ஆபத்ததில் உங்கள் கண்கள் உள்ளன.  உங்கள் பார்வையில் ஏதாவது மாற்றங்களை நீங்கள் அவதானிப்பதற்கு முன்பாக, ஆய்வுச் சோதனை விழித்திரை நோயைக் கண்டறிய முடியும்.

சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை என்பது ஒரு கண் மருத்துவர் மூலமாக நீங்கள் வழமையாக வைத்திருக்கும் கண் சோதனைகளின் ஒரு பகுதி அல்ல. வேறு கண் வியாதிகள் உள்ளனவா என ஆய்வுச் சோதனை பார்ப்பதில்லை. ஒழுங்கான கண் சோதனைகளுக்காக நீங்கள் உங்கள் கண் மருத்துவரிடமும் தொடர்ந்து செல்ல வேண்டும்.

சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை மின் ஒளிப்படவியலைப் பயன்படுத்துகின்றது

2. சர்க்கரை வியாதி மூலமான விழித்திரை நோய்  

கண்ணின் பின்புறத்தை உயர்ந்த அளவிலான இரத்த சர்க்கரை அளவுகள் சேதப்படுத்தும்போது, சர்க்கரை வியாதி விழித்திரை நோய் ஏற்படுகின்றது. அது விழித்திரையிலுள்ள இரத்த நாளங்களைில் கசிவை அல்லது அடைப்பை ஏற்படுத்தலாம்.  

சிகிச்சை அளிக்கப்படாத சர்க்கரை வியாதி கண் விழித்திரை நோய் பார்வை இழப்பை ஏற்படுத்தலாம். போதியளவில் முன்னராகவே அது கண்டுகொள்ளப்படும்போது, சிகிச்சை உங்கள் கண்களுக்கான சேதத்தைக் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்.

சர்க்கரை வியாதி எவ்வாறு உங்கள் கண்களைப் பாதிக்கலாம் என்பது பற்றிய அதிகளவிலான தகவலை NHS.UK என்பதில் வாசிக்கவும். .

3. சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனையை நாங்கள் எவ்வாறு செய்கிறோம்

ஆய்வுச் சோதனைக்கு முன்பாக கண் துளிகள் விடப்படுகின்றன.  

  1. ஒரு விளக்கப்படத்திலுள்ள சில எழுத்துக்களை வாசிக்குமாறு உங்களைக் கேட்போம்.
  2. உங்கள் கண்களுக்குள் துளிகளை விடுவோம். இவை சில வினாடிகளுக்குக் குத்தும் மற்றும்

உங்கள் பார்வையை மங்கலாக்கக்கூடும்.

  1. துளிகள் செயற்பட ஆரம்பிக்கும்போது, ஒரு கமராவுக்குள் பார்க்குமாறு உங்களைக் கேட்போம்.

இந்தக் கமரா உங்கள் கண்களில் தொடாது.

  1. உங்கள் கண்களின் பின்புறத்தைப் படமெடுப்போம். ஒரு பிரகாசமான பளிச்சீடு இருக்கும்.

உங்கள் நியமனம் வழமையாக சுமார் 30 நிமிடங்களை எடுக்கும்.

4. சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனைக்கு நாங்கள் உங்களை எப்போது அழைக்கிறோம்

சர்க்கரை வியாதியுள்ள 12க்கும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒவ்வொருவரையும் சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனைக்காக அழைக்கிறோம்.

எத்தனை தடவைகள் நாங்கள் உங்களை அழைக்கிறோம் என்பது உங்களின் கடைசி 2 ஆய்வுச் சோதனை நியமனங்களிலிருந்து பெறப்பட்ட முடிவுகளில் தங்கியுள்ளது.  சர்க்கரை வியாதி தொடர்பான விழித்திரை நோயை நாங்கள் கண்டுகொள்ளாவிட்டால், ஒவவொரு 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒருமுறை ஆய்வுச் சோதனைக்காக உங்களை அழைப்போம்.

5. சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனையின் சாத்தியமான ஆபத்துக்கள்

ஆய்வுச் சோதனை எதுவும் 100% நம்பகரமானதல்ல.

கண்ணுக்குள் விடப்படும் துளிகள் சில வினாடிகளுக்குக் குத்தக்கூடும். ஆனால் ஆய்வுச் சோதனை வலியை ஏற்படுத்தாது, மற்றும் கருவி உங்கள் கண்களைத் தொடாது.  

சோதனைக்குப் பின்னர், 6 மணித்தியாலங்கள் வரையிலான நேரத்துக்கு:

  • உங்கள் கண்கள் மங்கலாக இருக்கக்கூடும் – அது வழமைக்குத் திரும்பும் வரை வாகனம் ஓட்ட

வேண்டாம்.

  • அனைத்தும் மிகவும் பிரகாசமாகத் தோன்றலாம்- சன்கிளாசஸ் அணிவது உதவலாம்.

6. சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனையின் முடிவுகள்  

உங்கள் ஆய்வுச் சோதனைக்குப் பின்னர், உங்கள் கண்களின் படங்களை ஒரு மருத்துவ நிபுணர் சரிபார்க்கிறார்.   

3 வாரங்களுக்குள் முடிவுகளை உங்களுக்கும் உங்கள் குடும்ப வைத்தியருக்கும் அனுப்புவதற்கு நாங்கள் திட்டமிடுகிறோம்.

ஒரு தெளிவான முடிவை நாங்கள் பெறவில்லை என்றால், இன்னொரு நியமனத்துக்காக நாங்கள் உங்களைத் திரும்ப அழைக்கக்கூடும்.  

உங்கள் கண்களின் பின்பக்கத்தில் ஏற்படும் சர்க்கரை வியாதி மாற்றங்கள் தொடர்பாக 3 வகைப்பட்ட முடிவுகள் உள்ளன:

  • மாற்றங்கள் இல்லை- சர்க்கரை வியாதி விழித்திரை நோய் இல்லை என இது அழைக்கப்படுகின்றது
  • உங்கள் கண்களில் சில மாற்றங்கள் உள்ளன – பின்னணி விழித்திரை நோய் என இது

          அழைக்கப்படுகின்றது (கட்டம் 1)

  • கண் சேதம் உங்கள் பார்வையைப் பாதிக்கலாம் – சிபார்சு செய்யப்படத்தக்க விழித்திரை நோய்

         என இது அழைக்கப்படுகின்றது. உங்களுக்கு ஒன்றில் ஓரளவுக்கு மோசமான விழித்திரை நோய்  

          (கட்டம் 2) அல்லது இரத்தக் கசிவுள்ள மோசமான விழித்திரை நோய் இருக்கக்கூடும் (கட்டம் 3).

          முடிவுகள் பற்றிய உங்களுக்கான கடிதம் இது பற்றி அதிகளவில் விபரமாகக் குறிப்பிடும்.

உங்கள் சோதனை முடிவுகளைப் பொறுத்து, உங்களுக்கு மேற்கொண்டு ஒரு நியமனம் தேவைப்படக்கூடும். இது உங்களுக்குச் சிகிச்சை அல்லது கூடுதலாக அடிக்கடி சரிபார்ப்புக்கள் தேவையா எனப் பார்ப்பதற்காகவாகும்.  ஒரு வேறு விதமான கமராவைப் பயன்படுத்தி, உங்கள் கண்கள் பற்றிய அதிகளவில் விபரமான ஒரு சரிபார்ப்பை நாங்கள் செய்யக்கூடும். இது சிலவேளைகளில் ஒளியியல் ஒத்திசைவு தொழில்நுட்பம் (optical coherence tomography – ஒரு OCT ஆய்வு) என அழைக்கப்படுகின்றது.

7. இந்த நாளுக்கான நடைமுறை உதவிக் குறிப்புகள் மற்றும் அறிவுரைகள்

நீங்கள் அணியும் பார்வைக் கண்ணாடிகள், கொண்டாக்ட் லென்செஸ், மற்றும் உங்கள் கொண்டாக் லென்ஸ் திரவம் அனைத்தையும் கொண்டுவரவும்.  

துளிகள் விடப்பட்ட பின்னர் உங்கள் கண்களில் உணர்ச்சி ஏற்படலாம் என்பதால், சன்கிளாசஸ் கொண்டுவரவும்.

நியமனத்துக்காக உங்களுடன் ஒருவரைக் கொண்டுவர நீங்கள் விரும்பக்கூடும்.  உங்கள் பார்வை வழமைக்குத் திரும்பும் வரை நீங்கள் வாகனம் ஓட்டக்கூடாது. அது 6 மணித்தியாலங்கள் வரையிலான நேரத்தை எடுக்கலாம்.

8. உங்களுக்கான ஆபத்தை எவ்வாறு குறைப்பது  

உங்களுக்கான ஆபத்தைக் குறைக்க உங்களால் முடியும், நீங்கள்:

  • முடிந்தளவில் பலனுள்ள முறையில் உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால்
  • இரத்த அழுத்தத்தைச் சரிபார்ப்பதற்கு உங்கள் மருத்துவரை ஒழுங்கான முறையில் பார்த்தால்
  • உங்கள் சர்க்கரை வியாதி கண் ஆய்வுச் சோதனை நியமனங்கள் அனைத்திலும் பங்குபற்றினால்
  • உங்கள் பார்வையில் மாற்றங்கள் எதையும் கவனிக்கும்போது, அறிவுரை பெற்றால்
  • சிபார்சு செய்யப்பட்டவாறு, உங்கள் சர்க்கரை வியாதி மருந்துகளை எடுத்தால்
  • மருத்துவ அறிவுரையைத் தொடர்ந்து, ஒழுங்காக உடற் பயிற்சி செய்தால்.

9. அதிகளவிலான தகவலும் ஆதரவும்  

அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விபரங்களுக்கு, உங்கள் ஆய்வுச் சோதனைக்கான அழைப்பை வாசிக்கவும்.

நீங்கள் இவற்றையும் செய்யலாம்:  

ஈசி றீட் மற்றும் ஏனைய மொழிகள் உட்பட, இந்தத் தகவல் மாற்று வடிவங்களில் கிடைக்கின்றது. வேறொரு  வடிவத்தை வேண்டிக்கொள்வதற்கு, நீங்கள் 0300 311 22 33 எண்ணை அழைக்கலாம் அல்லது  england.contactus@nhs.net இல் மின் அஞ்சல் அனுப்பலாம்.

சரியான நேரத்தில் ஆய்வுச் சோதனைக்கு உங்களை அழைப்பதற்காக, உங்களின் என்எச்எஸ் பதிவேடுகளிலிருந்து தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துகின்றோம். ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்தவும் தரமான பராமரிப்பை வழங்குவதற்கும் இந்தத் தகவல் எங்களுக்கு உதவுகின்றது. உங்கள் தகவலை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றோம் மற்றும் பாதுகாக்கின்றோம் என்பது பற்றி அதிகளவில் வாசிக்கவும்.

எவ்வாறு ஆய்வுச் சோதனையிலிருந்தும் விலகுவது எனக் கண்டுகொள்ளவும்.