ஐக்கிய இராச்சிய நுழைவிசைவு விண்ணப்பதாரி மோசடிக்காக கைது
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவிற்காக விண்ணப்பித்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஒரு நபர், முன்னர் வேறுபட்ட ஓர் அடையாளத்தில் விண்ணப்பித்திருந்து, பின் தனது தற்போதைய விண்ணப்பத்தில் மோசடியான தகவல்களை உபயோகித்திருந்தமைக்காக கைது செய்யப்பட்டார்.
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுகள் மற்றும் குடிவரவுப் பிரிவினரால் நுழைவிசைவு விண்ணப்பதாரி கொழும்பிலுள்ள மோசடிப் புலன்விசாரணைப் பணியகப் பொலிசிடம் பாரப்படுத்தப்பட்டார். இதே பெயருடன், ஆனால் ஒரு வேறுபட்ட பிறந்த திகதி மற்றும் குடும்ப விபரங்களை உபயோகித்து ஐக்கிய இராச்சியத்துக்கான ஒரு நுழைவிசைவுக்கு அவர் விண்ணப்பித்திருந்த போது, முன்னர் அவருக்கு அது மறுக்கப்பட்டிருந்தது.
விண்ணப்பதாரிக்கு நுழைவிசைவு விண்ணப்பம் மறுக்கப்பட்டதுடன் அவர் ஐக்கிய இராச்சியத்துக்கு ஒரு 10 வருட காலப் பிரயாணத் தடையையும் கொண்டிருப்பார். இதற்கு மேலதிகமாக தனது நடவடிக்கை களுக்காக இலங்கை அதிகாரிகளினால் சட்ட நடவடிக்கைகளுக்கும் அவர் முகங் கொடுப்பார்.
ஐக்கிய இராச்சிய நுழைவிசைவுகள் மற்றும் குடிவரவுசெயற்பாடுகள் முகாமையாளர்,டொனி வில்லியம்ஸ், கூறியது:
“ஐக்கிய இராச்சியத்தின் குடிவரவு விதிகளின் துஷ்பிரயோகித்தலை நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம். துஷ்பிரயோகங்களை எங்கு நாம் காண்கிறோமோ, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களில் ஒளிவுறைவின்றியும் மற்றும் நேர்மையாகவும் இருப்பதற்கு நாம் கடுமையாக அறிவுறுத்துகிறோம். ஒவ்வொரு விண்ணப்பமும் அதன் சொந்த தகுதியின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்படுமென்பதுடன் முன்னம் நுழைவிசைவு மறுக்கப்பட்டமை புதிய நுழைவிசைவு விண்ணப்பமும் மறுக்கப்படும் என்பதை அவசியம் கருதவில்லை. எவ்வாறாயினும், ஏமாற்றும் அல்லது மோசடி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும் சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரியின் விண்ணப்பத்தை நாம் எப்போதும் நிராகரிப்பதுடன் இந்தச் சம்பவத்திலானதைப் போன்று பரந்ததான விளைவுகளும் இருக்க முடியும்.”
அனைத்து நுழைவிசைவு விண்ணப்பங்களும் மோசடி தொடர்பாக பயிற்றுவிக்கப்பட்ட அதிகாரிகளால் தீவிரமான பரிசோதனைக்கு உட்படுமென்பதோடு, இந்த ஏமாற்று மோசடி இந்த கிரமமான சோதனைகளின் போது கண்டுபிடிக்கப்பட்டது.